Monday, November 29, 2010
அடுத்தது என்ன? What Next? பார்ட் 5 (நிறைவு)
முன்னாடி பகுதியில இந்த மாயா மாதஜியோட வரலாறு, குறிக்கோளைப் பத்தி தெளிவா புரிஞ்சிகிட்டிருப்பீங்க... இனி, வாங்க....என்னோட....
மாமனுசன் உருவாறது இயற்கையை ஒட்டின விஷயம்...அதனால நான் உங்களை அந்த ரூட்லேயே வரிசையா மைல்கல் கணக்கா நம்பர் போட்டு இட்டுகிட்டு போறேன்!
1 . மொதல்ல, இந்த மேட்டர நேரம் கெடைக்கரப்பெல்லாம் அப்பப்ப அசை போடனுமின்னு மனசுக்குள்ள ஒரு மூலையில எடம் போட்டு வையுங்க...தெனம் காலையில கண்ணாடி பாக்கிறப்ப, டக்குனு ஞாபகம் வருமில்ல?
2 . இது வரை படிச்சு தெரிஞ்சிகிட்டது, அனுபவத்தில தெரிஞ்சிகிட்டது, சொந்தக்காரங்க புள்ளைங்க மூலமா தெரிஞ்சிகிட்டதுன்னு உடல் உறுப்புகளோட சங்கட லிஸ்டு தயார் பண்ணுங்க...அந்த பார்டுங்க எப்படி மாறினா நல்லா இருக்கும்னு யோசியுங்க... உங்களில வின்ஜானிங்க இருக்கீக, டாக்டருங்க இருக்கீக... வெள்ள கொட்டு மாட்டிகிட்டு டெட் பாடிய உத்து பாத்துகிட்டே படிக்கிற புள்ளைங்க இருக்கீக... அந்த அந்த பகுதியில அக்கம் பக்கம் இருக்கிறவங்க சின்ன குழு ஒன்னு ஆரம்பீங்க.... மீட்டிங் போட்டு கலந்து பேசி, புது மாதிரி உடல் உறுப்புகளை (கை தனியா, கால் தனியா... இப்படி) வரைபடமா போடுங்க...காரு, டிவி, பிரிட்ஜுன்னு பழைய மாடலுங்கள புதுசா மாத்த டிசைன் போடற மாதிரி...
3. இப்ப நீங்க இருக்கிறது இன்டர்நெட்டு காலம்...உங்க கருத்த மத்தவங்களோட பரிமாறிக்கிறது ரொம்ப ரொம்ப சுலபமாயிடிச்சு... உங்களுக்கு தெரிஞ்சவங்க உலகத்தில எங்க இருந்தாலும் அவக யோசனையை அப்பப்ப கேளுங்க..
4 . எல்லா சின்ன குழுக்களும் மத்த குழுக்களோட அடிக்கடி டச் வச்சிக்கிட்டு, புது பார்ட்டுங்களோட வரைபடங்களில எதுங்க டாப்னு கண்டுகிட்டு, எல்லாருக்கும் பொதுவான 'தர வரிசை 10 ' பார்ட்டு லிஸ்டு போடுங்க!
5 . இது மனுஷன் இன்னும் ஒசத்தியா வரனுமின்னு சைய்யிற காரியம்... சுயநலம் கெடயாது....ஜாதி, மதம், இனம், மொழின்னு பிரிச்சு பாக்க எடமே இல்லீங்க... அதனால, யார் சொல்லுறது கரீட்டுங்கறது முக்கியமில்ல, எது கரீட்டுங்கறதுதான் முக்கியம்...
6 . அடுத்த பாயிண்ட்டுக்கு போவமா... நீங்க போடற புது ஷேப்பு உறுப்புங்க மனுஷ வடிவத்தில, எங்க எங்க பொருத்தின நல்லா இருக்குமின்னு யோசியுங்க...அமெரிக்கா விஞ்சானி பௌமிக் மனுஷ மூளை பெரிசாகுது, தலை பெரிச்சகுதுன்னு போன வாரம் மீடிங்க்ல சொன்னாரு... மறைஞ்ச விஞ்சான எழுத்தாளர் சுஜாதா ஒரு பத்திரிகை கேள்விக்கு "புவி சூடாகிறதால எதிர்கால மனுஷன் தோல் தடியாயிடும்... ரெண்டு இதயம் தோணலாம்"னு சொல்லியிருக்காரு... இதையெல்லாம் மனசில மிக்சு பண்ணி, மனுஷனோட வடிவம் எப்படி மாறும்னு (கொரங்கு எப்படி மனுஷனா மாறித்துன்னு தெரிஞ்சுகிட்ட மாதிரி) கூட்டா முடிவு செய்யுங்க.. இதையும் தர வரிசை 10 செய்யுங்க....சின்னதா விளக்கமும் கொடுங்க...இப்படி மாமனுசன் வரைபடங்களை ரெடி பண்ணுங்க!
7 . ஐடியா யாரு சொன்னாலும், நல்ல ஐடியாவான்னு பாருங்க... எல்லாரும், கூட்டா, ஒத்துமையா செயல்பட்டா, பத்து முழு மாமனிச வரைபடங்கள தயார் பண்றது கட்டாயம் சாத்தியம்... மனசு இருந்தா மார்க்கம் உண்டுங்க!
8 . இளவட்டங்கள தட்டிகுடுத்து தாஜா பண்ணி இந்த வேலையில நுழைச்சி விடனுங்க...இதை சீரியசா செய்யனூம்னு இல்லீங்க...மூளைக்கு வேலை குடுக்கிற, சவாலான விளையாட்டு விசயமா எடுத்துகிட்டு அவங்களும் கலந்துப்பாங்க...மனுஷ உடம்பு எப்படி வேலை செய்யுதுன்கிற அறிவு அவங்களுக்கு வளருமில்லியா?
9 . இது பைத்தியக்காரத்தனம்...தேவையே இல்லாத, நேரத்தை வீணடிக்கிற விசயம்னு மட்டும் யாராவ்து நெனைக்காதீங்க... டிவி பொட்டி முன்னாடி மணிக் கணக்கா ஒக்காந்து கிட்டு பாத்த விளம்பரங்களையே பாத்துகிட்டு, பாத்த காமெடி சீன்களையே பாத்துகிட்டு,
பாத்த சினிமாங்களையே பாத்துகிட்டு, சீரியல்ல பொண்ணுங்க பொண்ணுங்க கொடம் கொடமா கண்ணீர் விட்டு அழறதப் பாத்து கூட அழுவுங்கரீன்களே... அபப நானு குறுக்க ஸ்க்ரீன்ல தோணி 'இப்ப நீங்க செய்யிறது பைதிக்காரத்தனமில்லியா...ரொம்ப தேவையானதா.. நேரம் வீணா செலவாகலியா'ன்னு உங்களைப் பாத்து கேலி செஞ்சு, கைகொட்டி சிரிச்சு பேஜார் பண்ணிடுவேன்...கபர்தார்!
10 . இன்னொரு விஷயம்.. அரச மரத்தை சுத்தி வந்துட்டு அடி வயத்தை தொட்டுப் பாத்துகிட்ட கதையா 'எங்க லிஸ்டு ரெடி...மாமனுசன் ரெடியா?'ன்னு கேக்காதீங்க! நான் சொல்லிப் போட்டது பிள்ளையார் சுழி மாதிரி...நிதானமா போகணும்...அவசரக் கோலம் அள்ளித் தெளிச்ச மாதிரி இருக்ககூடாது...மாதக் கணக்கா வருஷக் கணக்கா தலைய ஒடச்சிகிட்டு லிஸ்டு தயாரிக்கணும்..
... போடற லிஸ்டு அப்பப்ப மாறும்.... இந்த முயற்சி தலைமுறை தலைமுறையா தொடரும்....
11 இன்னும் தெளிவா சொல்லனும்னா, உங்க காலத்துக்கு பெறகு உங்க சந்ததிங்க இந்த முயற்சியை சங்கிலித் தொடர் மாதிரி செய்வாங்க... பசங்க எதிர் காலத்தில நல்லா இருக்கணும்னு சொத்து சேத்து குடுக்கிற மாதிரி இந்த வேலையையும் அவங்களுக்கு போனசா குடுங்க! உங்க அடித்தளம் ஸ்ட்ராங்கா இருக்கட்டும்...
12 . கடோசியான கட்டத்துக்கு இப்ப நுழையணும்... ஒட்டுமொத்த மனுஷ சமுதாயமும் கூட்டா முடிவெடுத்து டாப் டன் மாமனுஷ வரைபடங்களை தயாரிக்கிறப்பவும் சரி, தேவைப்பட்டப்ப அந்தப் படங்களை மாத்தறப்பவும் சரி... அப்படிப் பட்ட நிலையில கோடானு கோடி மக்களும் ஒரே எண்ணம் கொண்ட ஒரே மனுசன்கிற நிலைக்கு நான் கொண்டாந்துடறேன்! "மாமனுசன் இப்படி உருவாகனும்"கிற ஏகோபித்த குரலோட உங்களை ஒரு மாபெரும் கூட்டுப் பிரார்த்தனை செய்ய வைப்பேன்...உங்க இந்த பரிசுத்தமான மெனக் கெடல் இறைவன் அல்லது இயற்கையோட கலந்து, உங்க உயிர் அணுக்களில தேவையான மாற்றம் நடக்க நான் வழி வகுப்பேன்... காலமும் நேரமும் கனிந்து வர்றப்ப கட்டாயம் மாமனுசன் பிறப்பான்.
'அடுத்தது என்ன'ன்னு கேள்வியை உங்க முன்னாடி வச்சு, அதை நீங்கதான் முடிவு செய்யப்போரீங்கன்னு இப்ப உங்களுக்குப் புரிய வச்சிட்டேன்.... எங்க ஆரம்பிச்சா எப்படி முடியும்னு 1 முதல் 12 வரை ஏணிப்படி கணக்கா வழியும் சொல்லிட்டேன்...
ஒண்ணா இருக்கக் கத்துக்கணும், அந்த உண்மையை சொன்னா ஒதுக்கணும் பாட்ட மனசில வாங்கிட்டு, கீழே கொஞ்சம் பாருங்க:
மனுசன்கிற நிலையில தேர் இருக்கு....அத இழுக்க உங்களுக்கு உதவப் போற வடம் நானு....ஜோரா ஒத்துமையா எல்லோரும் தேர் இழுங்க.... மாமனுசன்கிற நிலைக்கு மனுசத் தேரை கொண்டாந்திடுவீங்க! பெறகு என்ன... உரக்க ஒ போட்டு சொல்லுங்க:
ஊர் கூடித் தேர் இழுப்போம் (இதாங்க என்னோட நாவலோட பேரு!)
சொல்லறதை சொல்லி முடிச்சிட்டேன்....செயல்ல இறங்க ஆரம்பீங்க... வரட்டா?
இனி உங்கள் எண்ணத்துடன் உலவப் போகும்
மாயா மாதாஜி
பட உதவி: arunachala-live.com
Feedback: nithyavaradants@rediffmail.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment