அறிமுகம்
மூன்றாம் புறம்
(ஒரு புதுவித குறுந்தொடர்)
ஆசிரியர்: நித்யா
சமர்ப்பணம்
விவசாயிகளுக்கும்
நில
விற்பனையாளர்களுக்கும்
சொந்த வீட்டுக்
கனவில் மிதப்பவர்களுக்கும்
--------------------------------------------------------------------------------------------
இக்கதையில் வரும்
பாத்திரங்க்ளும், சம்பவங்களும் கற்பனையே
---------------------------------------------------------------------------------------------
முகவுரை
நாரயண...நாரயண..
எல்லோருக்கும்
இந்த நாரதரோட ஆசீர்வாதம். தம்புராவைக்
கையில வச்சிண்டு சதா நாராயணன் நாமத்தை ஜபிச்சின்டு இருக்கிற அதே நாரதர் தான்.
நம்ப மாட்டேஙகன்னு
தெரியும். இந்த நாவலுக்கு முகவுரை எழுத வேண்டிகிட்ட ஆசிரியர் நித்யாவே நான்
நாரதர்னு நம்பலையே!
திரிலோக
சஞ்சாரியான நான், இருக்கிற வேலையெல்லாம் விட்டுட்டு, இந்த blogg கதைக்கு முகவுரைன்னு ஒன்னை ஏன்
எழுதணும்?
வைகுண்டத்தில
ஸ்ரீதேவிக்கும் பூதேவிக்கும் பேச்சுவாக்கில
ஒரு நீயா நானா போட்டி. தேவர்களோட கால்
தூசிக்கு பூமி வாசிகள் சமம் ஆகமாட்டார்கள் என்றும், தாங்க முடியாத
அக்கிரமங்களையும் அநியாயஙகளையும் செய்யும் நர மனிதர்களை பூதேவி எப்படித்தான்
தாங்குகிறாளோ என ஸ்ரீதேவி கிண்டலடிக்க, சேற்றில் மலர்ந்த செந்தாமரையாய் ஒரு
இளம் விவசாயி வாழ்ந்து காட்டிய உண்மைக் கதை பற்றியும், அதனால் ஏற்படப்போகும் புதிய சமுதாயப் புரட்சி பற்றியும் அறிந்தால், ஸ்ரீதேவியும், முப்பது முக்கோடித் தேவர்களும் முக்காடிட்டுக் கொள்வார்களென்று பூதேவி
பதிலுக்கு சவால் விட, இரண்டு பக்கமும் பிரச்சினையை ஊதிப் பெரிதாக்க இந்த நாரதருக்கு வேலை வந்தது!
பூதேவி சவால்
விட்ட விவசாயியின் கதையை உடனே என் தம்புராவின் மூல்ம் தெரிந்து கொண்டேன் (எனது
தம்புராவின் முன்பு உஙகள் ஐபாடெல்லாம் ஒரு ஜுஜுபி என்பதில் ஐயப்பாடு வேன்டாம்!).
எப்போதோ ஒரு முறை blogல் எழுதிவிட்டு, அடுத்து என்ன எழுதலாம் என்று தவித்துக் கொண்டிருந்த ஆசிரியர் நித்யாவின்
மூளையில், இக் கதையின் கருவை பூதேவி விதைக்க, உடனே மனுஷ்ன் சவசவவென்று எழுதித்
தள்ளிவிட்டார்!
பூதேவியோட சவால்
கதையாச்சே! ஸ்ரீதேவிக்கு ஆப்பு வைக்கப் போற கதையாச்சே! முழு வீச்சில் படிச்சேன்.
மனதைத் தொடற கதை தான்...சந்தேகமேயில்ல.
ஆனா, ஏதோ புதிய சமுதாயப் புரட்சின்னு பூதேவி பெருமையடிச்சுக் கிட்ட மாதிரி நாவல்ல
ஒரு வரி கூட என் கண்ணில படலே!
இதில் ஏதோ
தில்லுமுல்லு (தில்லாலங்கடி வேலை?) நடந்திருக்கு. நேர ஆசிரியர் கிட்ட போனேன் (மாறு வேஷத்தில -
மனுஷ வெஷத்தில).கதையப் பத்தி அவர் மூச்சு விடல.
விடுவேனா...பிள்ளயார் சுழியிலேந்து முடிவு வரை அவர் எழுதி வச்சிருந்ததை
மனசுக்குள்ள scan பண்ணி ஒரு எழுத்து விடாம ஒப்பிச்சேன். மனுஷன் அசந்து போயி கதைக்கு நீங்கதான்
முகவுரை எழுதண்ம்னு என் கால்ல விழுந்து வேண்டிக் கிட்டார். ஆனா, நான் நாரதர்னு சொன்னா அவர் நம்பவே
இல்லை!
இந்தக் கதையில, சமுதாயப் புரட்சி பத்தி எங்க வருதுன்னு ஆசிரியரைக் கேட்டேன். பதில் சொல்லாம, பேந்த பேந்த
முழிச்சார்!
நேர பூதேவி
கிட்ட போய்க் கேட்டேன். நமட்டு சிரிப்போட, வர வேண்டிய நேரத்தில வரும்னு ரஜினி
ஸ்டைல்ல பதில் கிடைச்சுது!
விடல நான்...
ஒரு க்ளூ குடுங்க தேவின்னு கேட்டேன்.
மயில்சாமி மூலமா தெரியும்னு சொல்லிட்டு மறைஞ்சு போயிட்டாஙக.
வாசகர்களே.....ஸ்ரீதேவி-பூதேவி
சவால் விஷயத்தில இந்த நாரதரோட கலகம் நன்மையில முடியனும்னா, நீங்க எனக்காக ஒரு காரியம் செய்யணும்...மனுஷங்களப் பத்தி மனுஷஙகளூக்குதான
தெரியும்? இந்த blogg கதையைப் படிச்சு, மூன்றாம் புறம்னு ஏன் தலைப்பு, கதையில மயில்சாமி எங்க வர்றாரு, என்ன சமுதாயப் புரட்சி நடக்கப் போகுதுன்னு உங்க commentsல சொன்னா, நான் என் தம்புராவில பாத்துப்பேன்.
ஏன்னா, நான் பூலோகத்தை விட்டுக் கிளம்பியாகணும்....வேறே வேறே லோகத்தில சிண்டு முடியற
வேலை நெறய இருக்கு!
நாராயண....நாராயண.
இங்கனம்,
நாரதர்
(இனி வரும் மூன்றாம் புறம்....)
No comments:
Post a Comment