பகுதி 1
மூன்றாம் புறம்
(ஒரு புதுவித குறுந்தொடர்)
1. புதையல்
குற்றவாளிக் கூண்டில்
நின்றிருந்த கோகுலகிருஷ்ணனை ஏறெடுத்துப் பார்த்தார் நீதிபதி. அருகில் நவநீத்,கோபால், வெங்கட், ராதா ஆகியோர் தலை
குனிந்தபடி நின்றிருந்தனர்.
“ஏம்பா கோகுலகிருஷ்ணன்....உன்
பாட்டன் பயிர் செஞ்ச நிலத்தில புதையல் எடுக்க நீ முயற்சி செஞ்சதா உன் பேரில வழக்கு
பதிவாயிருக்கு....அதை ஒத்துக்கறியா...இல்லியா?”
“ஒத்துக்கறேன்
ஐயா....பொதயல் எடுக்கத்தாஙக நான் வந்திருக்கேன்”
கோகுல் அளித்த
பதில், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த சியாமளவை
அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சே...நல்லவனாக, அப்பாவியாக நடித்து ஏமாற்றி விட்டானே
கோகுல்? இவனுக்கு உதவத்தானே என்னுடைய மண வாழ்க்கைக்கு சுயம்வரத்தை
அறிவித்தேன்...எல்லாமே கேலிக் கூத்தாகி விட்டதே?
நீதிபதி
தொடர்ந்தார் –
“என்ன புதையல்
எடுக்க வந்தே கோகுல்?”
“மன்னிக்கணும்
ஐயா..அதை மட்டும் கேக்காதீங்க”
நீதிபதியின் முகத்தில்
கோப ரேகை பரவியதைக் கண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் பரத் அவசரமாக எழுந்தார்-
“யுவர் ஹானர்....கோகுல்
மட்டுமில்ல...பக்கத்தில நிக்கிற நாலு பேரும் கூட அரசாங்க சொத்தை திருட முயற்சித்ததா
எழுதிக் கொடுத்திருக்காங்க”
ஐவரின்
வாக்குமூலங்களையும் படித்துப் பார்த்த நீதிபதி, முழுமையான குற்றப் பத்திரிக்கையைத்
தாக்கல் செய்யும் வரை அவர்களை மூன்று மாத விசாரணைக் காவலில் வைக்க உத்திரவிட்டார்.
இறுகிய
முகத்துடன் நீதிமன்றத்தை விட்டு வெளியேறிய சியாமளாவை பச்சாதாபத்துடன் பார்த்தபடி
நரசிம்மாச்சாரியாரும் வாசுவும் உடன் தொடர்ந்தன்ர். அக் காட்சியை வெகுவாக
மனதுக்குள் ரசித்தபடி நின்றான் பாஸ்கர்.
யார் இந்த
கோகுல்? இவனுக்கும் சியாமளாவின் திருமண முடிவுக்கும் என்ன ச்மபந்தம்?
ஒரு வருடம் பின்னோக்கிப் போவோமா..........
(குறிப்பு: வாசகர்களே...மகரிஷி நாரதர் உஙகள் commentsக்காகக் காத்திருக்கிறார்!)
...தொடரும்
No comments:
Post a Comment