கடைசிப்
பந்து (இறுதிப் பகுதி ) - சுத்தியடிச்சதை
slow
motionல பாருங்க!
(காட்சி 16 - கண்ணாடி அறையில் நடந்த உரையாடல்கள்)
(காட்சி 16 - கண்ணாடி அறையில் நடந்த உரையாடல்கள்)
கோபால்: எல்லாரும் கவனமா கேட்டுக்குங்க ... இந்த வாழ்க்கைப் போட்டியில, முக்கியமான கடைசி நிமிஷங்களுக்கு வந்திருக்கிறோம் ... இதுவரை திவாகர் முன்னணியில இருந்தாலும், பரத் வீசப் போற கடைசிப் பந்து - அதாவது பரத்தோட கேள்விங்களுக்கு திவாகர் தரப் போற பதில்தான் இவரோட வெற்றி அல்லது தோல்வியை தீர்மானிக்கப் போறது!
திவாகர் பலே... போட்டி களை கட்டிடிச்சே... ஹலோ பரத்... நான் கொஞ்சமாவது யோசிக்கிற அளவுக்கு உன் கேள்விங்க இருக்குமா? நீ புல் டாஸ் பால் போட்டா நான் சிக்ஸர் அடிப்பேன்! லெக் ப்ரேக், பௌன்சர்னு போட்டா பந்து பவுண்டரிக்கு போயிடும்! எப்படி வசதி!
பரத்: திவாகர்..... நான் வீசப் போற
கேள்விங்க, GOOGLY பந்து கணக்கா இருக்கும்
திவாகர்: (கேலியாக) இங்க பார்றா மாசி.... பரத் பூச்சாண்டி காட்டரானே!
மாசி: பரத் பிரதர்.... GGOGLY ன்னா பந்து கன்னா பின்னான்னு திரும்பி திரும்பி போகணும்.... உன்னால முடியுமா?
திவாகர்: (கேலியாக) இங்க பார்றா மாசி.... பரத் பூச்சாண்டி காட்டரானே!
மாசி: பரத் பிரதர்.... GGOGLY ன்னா பந்து கன்னா பின்னான்னு திரும்பி திரும்பி போகணும்.... உன்னால முடியுமா?
கோபால்: (இடைமறித்து) ஒகே..ஒகே... இப்ப போட்டி ஆரம்பம்.... பரத்... கேள்வியை ஆரம்பி..
பரத்: திவாகர்..... உங்கப்பா ஜமீந்தார் ஜகந்நாதன் ஒரு கொலை கேசில மாட்டியிருக்கிறது உங்களுக்கு தெரியுமா?
திவாகர்: (அலட்சியமாக) இன்னைக்கு பேப்பரைத் தான் எல்லோரும் படிச்சீங்களே! அந்தக் கேசில எங்கப்பாவுக்கு எதிரா எந்த ஆதாரமும் இல்லேன்னு கோர்ட்டே சொல்லிடிச்சு!
பரத்: உங்க வீட்டு வேலைக்காரியோட
மகனை உங்கப்பா தீ வச்சு கொளுத்தினதா
அந்த கேஸ் போடப்பட்டிருக்கு ... அந்தப் பையனோட
நீங்க, குழந்தையிலேந்து பத்து வயசு வரை
பழகியிருக்கீங்க
திவாகர்: ஆமா.... நெஜம் தான் .. (கிண்டலாக) அது ஒன்னும் கொலை குத்தம் இல்லியே!
பரத்: நீங்க அமெரிக்காவில செட்டில் ஆனதூம் இந்த மோர்சியை பாத்தீங்க... செத்துப் போன வேலைக்காரி மகன் சாயல்ல மோசி இருக்கிறதால, இவர் பேர்ல உங்களுக்கு ஒரு தனி ஈர்ப்பு வந்திருக்கு! அதனாலதான் நீங்க மோர்சியோட க்ளோஸ் ப்ரண்டாயிட்டீங்க ... இவர் பேரையும் மாசின்னு மாத்திட்டீங்க ..... இல்லியா?
திவாகர்: நீ சொன்னது எல்லாமே சரி... 'அன்புக்கு உண்டோ அடைக்கும் தாழ்’னு நீ படிச்சதில்லையா பரத்!
பரத்: உங்க அன்போட தரம் எப்படிப் பட்டதுன்னு இந்த ஆங்கில மாதப் பத்திரிகை சொல்லுது! (கையிலிருந்த புத்தகத்தை காண்பிக்கிறான்)... இது GAY மனிதர்கள், அதாவது, ஓரினச் சேர்க்கையாளர்களோட பத்திரிகை... இதில, நீங்களும் இந்த மாசியும் நெருக்கமா இருக்க போட்டோங்க வந்திருக்கு!
திவாகர்: (சுரத்திழந்து ) ஓ ... பாத்திட்டியா....
பரத்: நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சிக்கப் போறதாகவும் இதில போட்டிருக்கு... இப்படி இருக்கச்சே, வீணாவுக்குத் தாலி கட்ட உங்களுக்கு என்ன தகுதி இருக்கு?
திவாகர்:(அவசரமாக) நோ...நோ...நானும் மாசியும் உடனடியா கல்யாணம் செஞ்சிக்கிறதா இல்ல.... எங்கப்பாவுக்கு வாக்கு குடுத்தபடி, ஜமீனுக்கு ஒரு வாரிசு பொறந்த பிறகுதான் எங்க கல்யாணத்தைப் பத்தி யோசிப்போம்...
வீணா: (கோபத்தில் வெடிக்கிறாள்) மிஸ்டர் திவாகர்... நான் என்ன பிள்ளை பெக்கற, உணர்ச்சி இல்லாத மிஷின்னு நெனைச்சு என்னை விலை குடுத்து வாங்கப் போறீங்களா? தாலி கட்டியவளோட கடைசி வரைக்கும் வாழணு ங்கிற இந்தியக் கலாச்சாரத்தையே நீங்க கேலி செய்யறீங்க.... நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்கும்னு இனி கனவில கூட நினைக்காதீங்க!
கோபால்: போதும்மா... (கையை மேலே தூக்கி) திவாகர் அவுட்டுன்னு இந்த அம்பயர் கை தூக்கிட்டேன்... போட்டி முடிஞ்சாச்சு!
சே
நிறைவு
நிறைவு
No comments:
Post a Comment