14. கோகுல் ந்ல்லவனா, கெட்டவனா?
தனது வாழ்வைத்
தானே சீர்குலைத்துக் கொண்டு, தந்தைக்குக் கொள்ளி போடமுடியாமல் வேறு
மாநிலத்தில் பதுங்கியிருந்து, இறுதியில் போலீஸிடம் சிக்கிச்
சிறையிலடைக்கப்பட்ட பாஸ்கருக்கு, சியாமளாவால் ஆறுதல் மட்டுமே சொல்ல
முடிந்தது.
இனி, அவளது எதிர்காலத்தையும், சாமந்தி கம்பெனியின் எதிர்காலத்தையும், வாசுவுடன் கை கோர்த்துக் கொண்டு எதிர் நோக்க சியாமளா தயார்.
தொடர்ந்து வந்த
நிகழ்சிகள் குதூகலமாகவே அமைந்தன.
இங்கிலாந்தில், சினிமாவுக்காக கிருஷ்ணர் சிலையை படமெடுக்கத் தனக்கு அனுமதி தந்த வெள்ளைக்கார
அதிகாரியின் பேரன் ஆல்பர்ட்டை ராமு சந்தித்தான்.
அச் சிலையைத் திரும்ப கிருஷ்ணாம்பட்டிக்குக் கொண்டுவரவேண்டுமென்கிற
தமிழ்நாட்டு பக்தர்களின் விருப்பத்தை ராமு ஆல்பர்ட்டிடம் தெரிவிக்க, அதற்கு உடனே அவன் சம்மதம் தெரிவித்தான்.
அச்சிலையைத்
இங்கிலாந்துக்குக் கொண்டு வந்த நாள் முதல், இறக்கும் வரை அவனுடைய தாத்தா, தன்னுடைய பதவி காலத்தில் தான் கிருஷ்ணாம்பட்டியில் செய்த பல தவறுகளுக்காக, மன நிம்மதியிழந்து தவித்ததாக ஆல்பர்ட் கூறினான். சிலையைப் பழையபடி உரிய இடத்தில் சேர்த்தால், தாத்தாவின் ஆன்மா சாந்தியடையுமெனத் தான் கருதுவதாகவும் அவன் தெரிவித்தான்.
ஒரே வாரத்தில்
கிருஷ்ணாம்பட்டிக்குச் சிலை வந்து சேர ஏற்பாடுகள் செய்துவிட்டதாக, சாரியிடம் போனில் மகிழ்ச்சியுடன் தெரிவித்தான் ராமு. தான் இங்கிலாந்தை விட்டு இந்தியாவுக்குக்
கிளம்பும் முன், ஆல்பர்ட்டை மறுபடி சந்தித்து, அவனது தாத்தா விட்டுச் சென்ற
கிருஷ்ணாம்பட்டி பற்றிய முழுத் தகவல்களையும் பெறப் போவதாகவும் ராமு சொன்னான்.
பாஸ்கர், மாஜி மந்திரி உதவியுடன் எவ்வாறெல்லாம் விசாரணைக் கைதிகளாக இருந்த கோகுல்
மற்றும் இதர கிராம இளைஞர்களை மிரட்டி வாக்குமூலம் தர வைத்தான் என்பதை, இன்ஸ்பெக்டர் பரத் பத்திரிக்கை மற்றும் சேனல் பேட்டிகளில் விவரித்ததன் காரணமாக, கோகுல் மீது சியாமளாவுக்கு இருந்த மனக் கசப்பு விலகியது. எனவேதான், சிறையிலிருந்த கோகுலைச் சந்திக்க
வாசுவும், சாரியும் கிளம்பியபோது,
சியாமளாவும் அவர்களோடு சேர்ந்து கொண்டாள்!
அவர்களின் கார்
பயணத்தின் போது சாரிக்குத் தொலைபேசி அழைப்பு வர, ராமு ம்று முனையில்
உற்சாகத்துடன் பேசினான் -
“மாமா...நீங்க உடனடியா இனிப்பு
வாங்கி எல்லோருக்கும் கொடுங்க...இப்ப ஆல்பர்ட் வீட்டிலேந்துதான் பேசறேன்...கிருஷ்ணாம்பட்டி பத்திய நாம எதிர்பார்த்த எல்லா தகவல்களும் கிடைச்சாச்சு மாமா!”
“க்ரேட்றா ராமு... விவரமா சொல்லு”
“அந்த வெள்ளைகார அதிகாரியோட
பெட்டியைக் குடஞ்சதில, கிருஷ்ணாம்பட்டி வரைபடம் கெடைச்சது.
கோல்ஃப் மைதானம், குறுக்க ஆறு, கிருஷ்ணாம்பட்டிக் கோயில், கோயிலை சுத்தி பயிர் நிலங்க, வீடுங்கன்னு ஆளுங்க பேரோட, அளவோட குறிச்சிருக்கு மாமா. குறிப்பா, கோகுலோட தாத்தா அனந்தகிருஷ்ணன்
நிலம் எங்கன்னு தெளிவா இருக்கு... அதை நான் உங்களுக்கு ஈ மெயில்ல அனுப்பறேன்”
“கோகுலை பாக்கத்தான் நாங்க போயிண்டு
இருக்கோம். அவன் ரொம்ப சந்தோஷப்
படுவான். கிருஷ்ண பகவான் உன் மனசில
புகுந்து ந்ல்லதை பண்ணியிருக்கார்...ரொம்ப ந்ன்றிடா ராமு”
“மாமா...நான்தான் உங்களுக்கு நன்றி
சொல்லணும். இப்ப என் மனசில ‘கிருஷ்ணாம்பட்டி’ன்னு டைட்டில் போட்டுண்டு ஒரு முழு சினிமா கதையே ஓடிண்டு இருக்கு!”
“பலே...பலே! சந்துல சிந்து பாடிட்டியா! சோழியன் குடுமி சும்மா ஆடாதுங்கறே!”
“அதை விடுங்க மாமா...கிருஷ்ணாம்பட்டி
விவசாயிங்களுக்கு ரொம்ப தொல்லை குடுத்ததா தன்னோட தாத்தா அவரோட டைரியில
எழுதியிருக்கிறதா ஆல்பர்ட் சொன்னான்.
கடைசி காலத்தில தாத்தா அதுக்காக வருத்தப் பட்டு சர்ச்சில பாவ மன்னிப்பு
கேட்டாராம். மாமா ...
ஆல்பர்ட்டோட தாத்தா
பேரை கேட்டா நீங்க ஆச்சரியப் படுவீங்க.. ஒரு நாள் நடுநிசியில உங்க காதில விழுந்த
பேருதான்... மேட்லி துரை!”
ஒரு வினாடி
அதிர்ந்து போனார் சாரி. அன்று தன்னுடைய
காதுகளில் விழுந்த கூத்து உரையாடல்கள் எல்லாம் கண்ணபிரானின் திருவிளையாடலா!
* * * *
சிறையில்
தன்னைப் பார்க்க சாரி, வாசுவுடன் சியாமளாவும்
வந்ததுடன், தன் தாத்தா உழுத நிலத்தின் இருப்பிடம் தெரிய ஆதாரம்
கிடைத்த தகவலை அவர்கள் சொல்ல, கோகுல் ஆனந்தக்
கண்ணீரில் நனைந்தான். சியாமளாவை நோக்கிக்
கைகூப்பிய வண்ணம் அவன் நெக்குருகிப் பேசினான் -
“சின்னம்மா..
என்னோட உடம்பை செருப்பா தெச்சுப் போடற அளவுக்கு நான் உங்களுக்கு கடமைப்
பட்டிருக்கீங்க.... லட்சுமி கடாட்சம்னா என்னன்னு உங்களைப் பாத்தப்புறம்தான்
புரிஞ்சுகிட்டேன்... உங்க பார்வை என் பேரில பட்ட பெறகுதான், நான் வருஷக் கணக்கா நிறைவேத்த முடியாம தவிச்சுக் கிட்டிருந்த என்னோட தாத்தாவோட
கனவு இப்ப நெஜமா நடக்கப்போற நெலைக்கு வந்திருக்கு. நீங்க, சாரி பெரியவரு, வாசு ஐயா அல்லாரும்
இந்த வெறும் பய பேரில பிரியம் காட்டி, ஆதரவு தர்றது, நான் செஞ்ச பூர்வ ஜென்ம புண்ணியங்க”
கோகுல்
மனதிலிருந்து வெளிப்பட்ட உண்மையான வார்த்தைகளால், வந்தவர்கள் நெகிழ்ந்து போயினர்.
அப்போது அங்கு
வந்த இன்ஸ்பெக்டர் பரத், அவருக்குச் சற்று முன்
கிடைத்த புதையல் பற்றிய சேதியை, அவர்களிடம்
பகிர்ந்துகொண்டார் -
“முன்னாள்
அமைச்சர் செல்லமுத்து ஏற்பாட்டின் படி, மிஷினை ஓட்டின ராபர்ட், பீட்டர் இருவரும்
கேரளாவில் மறைஞ்சுகிட்டிருந்ததை போலீஸ் கண்டுபிடிச்சுட்டாங்க. ஆங்கிலேயர் இருந்தப்ப, விவசாயிங்க அவங்க ந்கைங்களை கொள்ளையடிச்சு, கிருஷ்ணாம்பட்டி
நிலத்தில புதைச்சு வச்சதா ஒரு கேசு நடந்ததை இன்டெர்ந்ட்டில பார்த்திட்டு, அந்த மிஷின் ஓட்டற ஆசாமிங்க, இந்த அஞ்சு கிராமப்
புள்ளங்களோட, மண்ணைத் தோண்டி தேடியிருக்காங்க. ஆனா, ந்கைங்களை
கொள்ளையடிச்சதுக்கு ஆதாரமேயில்லன்னு ஆங்கிலேய அரசாங்கமே நாலு வருஷம் கழிச்சு
அந்தக் கேசை ரகசியமா மூடிட்டாங்கன்னு ரிகார்டில இப்ப தெரிஞ்சிடிச்சு”
’வெரி குட்
நியூஸ்’ என்ற வாசு, கம்பிகளுக்குப்
பின்னாலிருந்தவர்களைப் பார்த்து ஜோக் அடித்தான் -
“அப்ப நீங்க
எல்லோரும் கிருஷ்ண ஜெயந்திக்கு உங்க நிலத்தில கூத்து போடறது உறுதியாயிடிச்சு...இனியாச்சும்
புதையலை மறந்துடுவீங்க இல்லே!”
மற்ற நால்வரும்
குற்ற உணர்ச்சியில் தலை குனிய, கோகுல் தீர்மானமாகச்
சொன்னான் -
“வாசு சார் ...
நான் சின்னம்மா கிட்ட மொதல்லியே சொல்லியிருக்கேன்... கிருஷ்ணாம்பட்டி நிலத்தக்
கண்டுபிடிச்சு, ஏர் ஓட்டி உழுகணும்...கூத்து போடணும்...இன்னொரு
விஷயமும் தாத்தா சொல்படி செய்யணும்.. அதான் தாத்தா நிலத்தை தோண்டனும்!”
எல்லோரும்
வாயடைத்து நிற்க, சியாமளா சிறிது கோபம்
தொணிக்கக் கேட்டாள் -
“என்ன பேசறே
கோகுல்? கோர்ட்ல ஜட்ஜ் கிட்ட, புதையல் எடுக்கப் போறதா
நீ ஒத்துக் கிட்டது நெஜம்தானா?”
“ஆமாங்க
சின்னம்மா...ஆனா, அதை ரகசியமா செய்ய
மாட்டேன்! கிருஷ்ண ஜெயந்தியன்னிக்கு, கூத்து முடிவில எல்லா மனுஷனுங்க மத்தியில, என் பாட்டன்
நிலத்த தோண்டுவேங்க. அதுக்கு என்ன தண்டனை
குடுத்தாலும் நான் ஏத்துக்கிறேங்க!”
கோகுலின்
வெளிப்படையான பேச்சு, சியாமளா உள்பட அனைவருக்கும்
ஒன்றைப் புரிய வைத்தது. கோகுல்
விநோதமானவன். ஆனால் கெட்டவனில்லை!
பிறகு, கூத்துப் பட்டறை உரிமையாள்ர் கரோலினையும், வாசுவையும்
தனியே சந்திக்க ஆசைப்பட்டான் கோகுல்.
கிருஷ்ண ஜெயந்தி கூத்தின் முடிவுக் கட்டத்தில், ஒரு சிறிய காட்சியைச் சேர்க்குமாறு அவன் வேண்டுகோள் விடுக்க, அவர்களும் அதற்குச் சம்மதித்தனர்.
அது என்னவென்று, அந்த விழா நடைபெறும் வரை காத்திருந்து பார்ப்போமே!
(குறிப்பு: வாசகர்களே... அடுத்த பகுதியுடன் கதை முடிகிறது.
மகரிஷி நாரதரின் வினாக்களை நினைவில் கொள்ளவும்.)
...தொடரும்
No comments:
Post a Comment